விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வந்தனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

கொரோனா பாதிப்பை தொடர்ந்து சில காரணங்களால் இந்த தொடர் சில தவிர்க்கமுடியாத காரணங்களால் கைவிடப்பட்டது.இதனை தொடர்ந்து இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டது.நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றும்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த தொடர் கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் முதல் சீசனில் ஒரு ஹீரோயினாக நடித்து வந்தவர் ராஷ்மி ஜெயராஜ்.தனது நடிப்பால் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருந்தார்.ராஷ்மி ஜெயராஜூக்கு நவம்பர் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.இது குறித்த புகைப்படங்களும்,வீடியோக்களும் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வந்தன.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார்.தற்போது தனக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக அனைவருக்கும் அறிவித்துள்ளார்.இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

A post shared by rashmi jayrai fan page (@sweety_cutie_rashmi_jayraj)