தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகத் திகழும் நடிகர் சதீஷ் தொடர்ந்து அடுத்தடுத்த பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் முன்னதாக கடந்த ஆண்டு தீபாவளி வெளியீடாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த  திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் சதீஷ்.

தொடர்ந்து நகைச்சுவை கதாபாத்திரங்களில் முன்னணி நட்சத்திரம நடிகர்களோடு இணைந்து நடித்து வரும் சதீஷ் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்துள்ள நாய் சேகர் திரைப்படத்தை பிரபல நடிகரான கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.

நாய் சேகர் படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக குக் வித் கோமாளி பவித்ர லக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, நடிகர்கள் மனோபாலா & லிவிங்ஸ்டன் ஆகியோருடன் இணைந்து பிரபல இசையமைப்பாளர் சந்திரபோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ள நாய் சேகர் படத்திற்கு அஜீஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியான நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நாய் சேகர் பட குழுவினர் நாய் சேகர் திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது அந்த புகைப்படங்கள் இதோ…