பிரபல மாடல் ஆக இருந்து தற்போது சீரியல்களில் பிரபலமாக அசத்தி வருபவர் வீணா பொன்னப்பா.கன்னடாவில் சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மனம் கவர்ந்த நடிகையாக உருவெடுத்தார் வீணா பொன்னப்பா.இவர் நடித்த சீரியல்களும் ஹிட் அடிக்க ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் வீணா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சிவா மனசுல சக்தி.விக்ரம்,தனுஜா கௌடா ஹீரோ ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தனர்.இந்த தொடரில் பைரவி என்ற முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை பெரிதாக ஈர்த்திருந்தார் வீணா பொன்னப்பா.நெகட்டிவ் கதாபாத்திரமாக இருந்தாலும் பெரிய வரவேற்பை பெற்றார் வீணா.

சில படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் வீணா பொன்னப்பா.இந்த தொடரின் நிறைவுக்கு பிறகு கன்னடாவின் சூப்பர்ஹிட் தொடரான நா பேரு மீனாக்ஷி என்ற சூப்பர்ஹிட் தொடரில் நடித்து அசத்தி வந்தார்.இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தற்போது தனது சீரியல் குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

கடந்த 3 வருடங்களாக நா பேரு மீனாக்ஷி தொடரில் தீபிகா அகர்வால் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வந்தார் வீணா,அந்த கதாபாத்திரம் தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.தனக்கு இதுவரை ஆதரவு கொடுத்து வந்த அனைவருக்கும் நன்றி என்று எமோஷனலாக ஒரு பதிவு செய்துள்ளார்.