இசையமைப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக மாறியிருப்பவர் ஹிப்ஹாப் தமிழா.கனவுகளோடு இருந்த ஒரு மிடில் கிளாஸ் மனிதன் இன்று பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்படும் இசை நாயகனானாக மாறியுள்ளார்.ஆல்பம் பாடல்களில் ஆரம்பித்த இவர் விஷாலின் ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.இதனை தொடர்ந்து இவர் இசையமைத்த இன்று நேற்று நாளை,இமைக்கா நொடிகள்,கதகளி என்று பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்திருந்தார்.

இதற்கு இடையில் தனது வாழ்க்கையையே மையமாக வைத்து இவர் எடுத்த படம் மீசைய முறுக்கு.இந்த படத்தின் மூலம் நடிகராகவும்,இயக்குனராகவும் களமிறங்கினார் ஆதி.சுந்தர் சி இந்த படத்தை தயாரிக்க.இந்த படம் இளைஞர்களின் மனம் கவர்ந்த படமாக ஒரு கொண்டாட்டமாக அமைந்தது.நடிப்பதில் இறங்கினாலும் இசை மீது கொண்டுள்ள காதலை விடமால் படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இதனை தொடர்ந்து இவர் நட்பே துணை,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் ஹிட் நாயகனாக உருவெடுத்தார்.தனது படங்களை தவிர மற்ற ஹீரோக்களின் படங்களுக்கும் அட்டகாசமாக இசையமைத்து அசத்தும் ஹிப்ஹாப் தமிழா.லாக்டவுன் தொடங்கிய போது ரசிகர்களுக்காக ஒரு பாடலை வெளியிட்டார்.

அடுத்ததாக ஒரு பாடல் வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டதை அடுத்து தற்போது தனது ஆல்பம் பாடல் குறித்த அறிவிப்பை ஹிப்ஹாப் தமிழா வெளியிட்டுள்ளார்.நான் ஒரு ஏலியன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பம் பாடல் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.மொத்தம் 6 பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பத்தின் முதல் பாடல் கடந்த 6ஆம் தேதி வெளியானது.

இந்த ஆல்பத்தின் முதல் பாடலான நெட்ட தொறந்தா நெகட்டிவிட்டி என்ற பாடலின் லிரிக் வீடியோ சில நாட்களுக்கு முன் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.சமூகவலைத்தளங்களில் இருக்கும் தேவையற்ற விஷயங்களை பற்றி இந்த பாடல் பேசுகிறது.இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த முழு ஆல்பம் தற்போது வெளியாகியுள்ளது , ஆறு பாடல்கள் அடங்கிய இந்த ஆல்பம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஹிப்ஹாப் தமிழா பல வருடங்களுக்கு பிறகு ஆல்பம் பாடல் வெளியிட்டுள்ளதால், இந்த பாடல் அதீத எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ளது.இந்த ஆல்பத்தை கீழே உள்ள லிங்கில் காணலாம்