மிஷ்கினின் பிசாசு 2 பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
By Anand S | Galatta | April 25, 2022 19:57 PM IST

தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் இயக்குனர் மிஷ்கின் தனக்கே உரித்தான பாணியில் தனி ஸ்டைலில் பல வித்தியாசமான படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்தவர். அந்த வகையில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் பிசாசு 2.
முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ஹாரர் த்ரில்லர் திரைப்படமான பிசாசு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பிசாசு 2 திரைப்படம் தயாராகியுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாக்கியுள்ள பிசாசு 2 திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகை பூர்ணா, சந்தோஷ் பிரதாப், நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பிசாசு 2 படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் பிசாசு 2 படத்தின் டீசர் வருகிற ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5 மணி அளவில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Gear Up! @DirectorMysskin's #Pisasu2 | #Pisachi2 | #Pishaachi2 | #Pishaachi2 Tamil |Telugu | Malayalam | Kannada
— Andrea Jeremiah (@andrea_jeremiah) April 25, 2022
Teaser on 29th April, 5pm @Rockfortent @Directormysskin @VijaySethuOffl @shamna_kkasim @Actorsanthosh @saregamasouth @teamaimpr @UrsVamsiShekar @SVC_official pic.twitter.com/YLTPMLVnGQ