உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சைக்கோ. மிஸ்கின் இந்த படத்தை இயக்கியுள்ளார். விஷால் வைத்து துப்பறிவாளன் 2 படத்தின் இறுதிகட்ட பணிகளில் பணிபுரிந்து வருகிறார் மிஸ்கின். கடந்த ஆண்டு சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். 

psycho

இதில் பார்வையற்றவ இசை கலைஞராக நடிக்கிறார் உதயநிதி. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் இயக்குனர் ராம், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாக இருந்தது பின்பு சில காரணத்தால் அவருக்கு பதிலாக தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார் என்பது தெரியவந்தது. படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

mysskin mysskin

தற்போது இயக்குனர் மிஸ்கின் கலாட்டா குழுவிற்கு அளித்த நேர்காணலில் சைக்கோ திரைப்படம் உருவானது குறித்தும், தனது திரை அனுபவம் குறித்தும் பகிர்ந்துள்ளார். அப்போது பேசியவர், இப்போதெல்லாம் எளிமையாக இருப்பதாக கூறியுள்ளார். சமீபத்தில் தன் மகளை காண அமெரிக்கா சென்றிருந்த போது, ஒரே ஒரு ஜீன்ஸ் மற்றும் ஒரே ஒரு புத்தகம் கொண்டு சென்றாராம். வரும் போது 150 புத்தகம் வாங்கி வந்தாராம். மேலும் அவரது ஸ்டைலில் புத்தர் கூறிய வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டார்.