தொலைக்காட்சி சேனல்களில் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வருபவர் நந்தினி என்ற மைனா.சரவணன் மீனாட்சி தொடரில் இவர் நடித்த மைனா என்ற காதாபாத்திரத்துக்கும்,இவரது காமெடி டைமிங்களுக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் மைனா என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி 3, டார்லிங் டார்லிங்,ப்ரியமானவள்,நீலி,நாம் இருவர் நமக்கு இருவர்,சின்னத்தம்பி என்று அனைத்து முன்னணி சேனல்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார் நந்தினி. மைனா நந்தினிக்கும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் யோகேஸ்வரனுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. 

சமீபத்தில் மைனா நந்தினி ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்த தகவலை அவரின் கணவர் யோகேஸ்வரன் சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். நந்தினிக்கு குழந்தை பிறந்த தகவல் அறிந்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இணையத்தை அதிர வைத்தனர். நந்தினியின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நல்ல விஷயம் நடப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது என கமெண்ட் செய்தும் வந்தனர். 

இந்நிலையில் முதல் முறையாக அவரது கணவர் யோகேஷ் பகிர்ந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார் மைனா. குழந்தையின் பிஞ்சு விரல்களை பிடித்திருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மைனா நந்தினியின் கணவர் யோகேஷ். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் குழந்தையை குறும்பா என்று செல்லமாக அழைத்து, சீக்கிரமே மகனின் புகைப்படத்தை வெளியிட போவதாக மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். 

கடந்த ஆண்டு வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் மைனா நந்தினி. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இயக்குனர் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்கியிருந்தார். சூரி, அணு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ், நட்டி ஆகியோர் நடித்திருந்தனர். இமான் இசையமைத்திருந்தார்.