மைனா நந்தினியின் ட்ரெண்டிங் கராத்தே வீடியோ !
By Aravind Selvam | Galatta | November 10, 2020 20:51 PM IST

விஜய் டிவி,சன் டிவி,ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் பிரபல சீரியல் நடிகையாக இருந்து வருபவர் நந்தினி என்ற மைனா.சரவணன் மீனாட்சி தொடரில் இவர் நடித்த மைனா என்ற காதாபாத்திரத்துக்கும்,இவரது காமெடி டைமிங்களுக்கும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து இவர் மைனா என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி 3,டார்லிங் டார்லிங்,ப்ரியமானவள்,நீலி,நாம் இருவர் நமக்கு இருவர்,சின்னத்தம்பி என்று அனைத்து முன்னணி சேனல்களிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறினார் நந்தினி.கடைசியாக இவர் நடித்துவந்த அரண்மனை கிளி தொடரும் நல்ல வரவேற்பை பெற்றுவந்தது.கொரோனாவால் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் தொடர் பாதியில் கைவிடப்பட்டது.
நடனத்திலும் ஆர்வம் கொண்ட இவர் ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் தொடரிலும் பங்கேட்றிருந்ததார்.மேலும் கலக்கப்போவது யாரு,காமெடி கில்லாடிஸ் உள்ளிட்ட சில தொடர்களில் நடுவராகவும் இருந்துள்ளார் நந்தினி.திரைப்படங்களில் துணை நடிகையாகவும் அசத்தியுள்ளார் நந்தினி.வம்சம்,கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிக்கப்பட்டது.
சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்ட சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்திலும் இவர் நடித்திருந்தார்.இவரது கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.இவர் பிரபல சீரியல் நடிகரான யோகேஸ்வரன் என்பவரை கடந்த 2019-ல் கரம்பிடித்தார்.
இவருக்கு கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது.குழந்தை பிறந்து சில நாட்களிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் மைனா,அவருடன் இணைந்து அவரது கணவர் யோகேஷும் இந்த தொடரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் முதல் முறையாக குழந்தையுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் மைனா.இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார் மைனா.ஒர்கவுட் செய்யும் இடத்தில் ஜாலியாக கராத்தே கலையை வெளிப்படுத்தி ஒரு வீடீயோவை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
IPL sensation Natarajan's latest video about Mookuthi Amman goes viral!
10/11/2020 07:00 PM
Arjun Das' Andhaghaaram New Trailer | Highly intriguing | Atlee
10/11/2020 06:21 PM
Balaji Murugadoss Adjustment Controversy - Rubaru Mr. India VP issues statement!
10/11/2020 06:00 PM
Suriya's Soorarai Pottru new song video | a soulful number from GV Prakash
10/11/2020 05:44 PM