இந்தியாவின் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் விஜய் டிவி வழங்குகிறது. பிக்பாஸ்-ல் இதுவரை நடைபெற்ற நான்கு சீசன்களையும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் ஐந்தாவது சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெளியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் ப்ரோமோ மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பல நட்சத்திரங்களின் பெயர்கள் பிக்பாஸ்ஸில் போட்டியாளர்களாக  கலந்து கொள்வார்கள் என வதந்திகள் பரவி வருகிறது. முன்னதாக டிக்டாக் மற்றும் யூடியூபில் பிரபலமான ஜி.பி.முத்து, விஜய் டிவியின் பிரியங்கா தேக்கரண்டி, ஷகீலாவின் மகளான மில்லா என பலர் பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ளார்கள் என பேச்சுகள் பரவி வந்த நிலையில் தற்போது மற்றொரு நடிகையும் பிக் பாஸ் செல்வது குறித்து மறைமுகமாக பதிவிட்டுள்ளார். 

தமிழில் பல முன்னணி மெகா தொடர்களிலும், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் உள்ளிட்ட படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சூசன் ஜார்ஜ் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் இதுகுறித்து வெளியான ஒரு மீம் பதிவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார் நடிகை சூசன் ஜார்ஜ். எனவே மறைமுகமாக தான் பிக்பாஸில் கலந்துகொள்ள இருப்பதை சூசன் ஜார்ஜ் உறுதி செய்கிறார் என்ற பேச்சும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகரித்துள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
myna fame actress suzane george indirectly confirms bigg boss tamil season 5 entry