தெலுங்கு சினிமா ரசிகர்களின் ஃபேவரட் கதாநாயகனாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வரும் நடிகர் பிரபாஸ்  அடுத்ததாக நேரடி பாலிவுட் திரைப்படமாக ஹிந்தி மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார். இதிகாசக் கதைகளைமான இராமாயணத்தைத் தழுவி தயாராகியிருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் இறுதி கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  

முன்னதாக கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் தற்போது பிரபாஸ் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ரொமான்டிக் ஆக்ஷன் திரைப்படமாக தயாராகியிருக்கும் ராதேஷ்யாம் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதேஷ்யாம் படத்தில் பாக்யஸ்ரீ, கிருஷ்ணம் ராஜு, சத்யராஜ், ஜெகபதிபாபு, முரளி சர்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

UV  கிரியேஷன்ஸ் மற்றும் T-SERIES பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகும் ராதே ஷ்யாம் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இசையமைப்பாளர் தமன்.S பின்னணி இசை சேர்க்கிறார். கடந்த ஜனவரி 14ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்த ராதே ஷ்யாம் திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிப்போனது. 

இதனையடுத்து இத்திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியிடப்படும் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்த நிலையில், இசையமைப்பாளர் தமன்.S, “ராதே ஷ்யாம் திரையரங்குகளில் மட்டுமே ரிலீசாகும்” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். மேலும் “உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் மட்டுமே சந்திப்பேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார். எனவே ராதேஷ்யாம் படம் கட்டாயம் திரையரங்குகளில் தான் ரிலீஸ் ஆகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.