கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. மூன்றாவது சீசனில் முகென் ராவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

mugenrao

இயக்குனர் அட்லீ மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் ஜோடியாக நயன் தாரா நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

bigil

mugenrao

விஜய் குரலில் வெளியான வெறித்தனம் பாடலுக்கு முகென் ராவ் பாடிய பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே முகென் ராவ் பாடிய சத்தியமா பாடல் இணையத்தை தெறிக்கவிடுகிறது என்பது கூடுதல் தகவல்.