விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ்  நிகழ்ச்சியின் 3-ம்  சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றிபெற்றவர் முகேன் ராவ். மலேசியாவில் பிறந்து வளர்ந்த முகேன் ராவ் மலேசியாவில் பல ஆல்பம் பாடல்களை பாடி மிகுந்த பிரபலம் அடைந்தவர். 

முகேன் ராவ் ,மலேசியாவில் உருவான சில தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் மிகுந்த பிரபலம் அடைந்த முகேன் ராவ்  இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக களமிறங்குகிறார்.  

இயக்குனர் கவின் இயக்கும் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்க மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்க ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்கை மேன் ஃபிலிம்ஸ் சார்பாக கலைமகன் முபாரக் தயாரித்துள்ள இத்திரைப்படம் விரைவில் வெளியாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்தன. அந்தவகையில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் நடிகர் முகேன் ராவின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது வேலன் திரைப்படத்தில் வேலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் அந்த போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விரைவில் வேலன் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.