பிரபல மாடலாக இருந்து பின்னர் சினிமாவில் ஹீரோயினாக ஆகி அசத்தியவர் ப்ரியங்கா ஜெயின்.இதனை தொடர்ந்து ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் தொடரின் ஹீரோயினாக ஆனார் ப்ரியங்கா.தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் மௌனராகம் தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் ப்ரியங்கா ஜெயின்.

தெலுங்கில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த தொடர் அடுத்ததாக தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.விஜய் டிவியில் காற்றின் மொழி என்ற பெயரிலே ரீமேக் செய்யப்பட்டது.இந்த தொடரிலும் ப்ரியங்கா ஜெயின் ஹீரோயினாக நடிக்கத்தொடங்கினார்.இந்த தொடரில் சஞ்சீவ் ஹீரோவாக நடிக்கத்தொடங்கினார்.

இந்த தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் ரீச் ஆனார்.இந்த தொடர் தமிழ் மற்றும் தெலுங்கில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.இந்த தொடரின் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

662 எபிசோடுகள் வெற்றிகரமாக சென்று வந்த இந்த தொடர் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது என்ற தகவலை சீரியல் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.பெரிய வெற்றியை பெற்றிருந்த இந்த தொடரின் தெலுங்கு வெர்ஷன் நிறைவடைவது சீரியல் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழில் இந்த தொடர் தொடர்ந்து ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

A post shared by Priyanka M Jain (@priyankamjain_)