விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பெரிய ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று மௌன ராகம்.இந்த தொடரின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ரவீனா தாஹா இந்த தொடரில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ராஜீவ் பரமேஸ்வர்,சிப்பி ரஞ்சித் என முதல் சீசனில் நடித்த பல நட்சத்திரங்கள் இந்த தொடரிலும் முன்னணி வேடத்தில் நடித்து வருகின்றனர்.ஷில்பா,சல்மான்,ராகுல் என பல புது நட்சத்திரங்களும் இந்த தொடரின் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று செம ஹிட் அடித்து வருகிறது.300 எபிசோடுகளை கடந்து இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடர் இதுவரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

வரும் திங்கள் முதல் இந்த தொடர் 6.30 முதல் 7.30 வரை 1 மணி நேர சிறப்பு தொகுப்பாக ஒளிபரப்பாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.இந்த 1 மணி நேர ஸ்பெஷல் எபிசோடுகளின் ஒளிபரப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.