ஸ்பெயினில் நாட்டில் ஸ்பானிஷ் மொழியில் வெளியான La Casa De Papel தொலைக்காட்சி நிகழ்ச்சியை நெட்பிளிக்ஸ் நிறுவனம் மொத்த உரிமம் பெற்று ஆங்கிலத்தில் வெப் சீரிஸாக வெளியிட்டது தான் MONEY HEIST. வெளியான நாளிலிருந்து இன்று வரை இதன் மேல் இருக்கும் எதிர்பார்ப்பும் ஈர்ப்பும் ரசிகர்கள் மத்தியில் குறைந்தபாடில்லை. காட்சிக்கு காட்சி நம்முடைய கற்பனைகளை எல்லாம் உடைத்தெறிந்து நம் சிந்தனைக்கு எட்டாத  காட்சியமைப்பும் விறுவிறுப்பான திரைக்கதையும் MONEY HEIST-ன் மிகப்பெரிய பலம்.

 2017 ஆம் ஆண்டு 22 எபிசோடுகள் உடன் வெளியான MONEY HEIST தொடர்ந்து இதுவரை நான்கு பாகங்களை வெளியிட்டுள்ளது.ஒவ்வொரு பாகமும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. சிறந்த அறிவாளி ஒரு வங்கியை எப்படி கொள்ளையடிக்கிறான்  என்பதுதான் மூலக்கதை. புத்திசாலியான ஒரு ப்ரொபசர் ஒரு மிகப்பெரிய வங்கியை கொள்ளை அடிப்பதற்காக ஒரு குழுவை உருவாக்குகிறார். அந்த குழுவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் டோக்கியோ, நைரோபி, ரியோ என உலகில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நகரங்களின் பெயர்களே அவர்களின் பெயர்களாக சூட்டப்படுகிறது. 

ஒவ்வொரு ஃப்ரேமிலும்  நமக்கு பதைபதைப்பை ஏற்றும் அளவிற்கான திரைக்கதையை அமைத்துள்ளார்கள். ஹாலிவுட் திரைப் படங்களுக்கு இணையான பிரம்மாண்டத்தில் இருப்பதால் MONEY HEIST,வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது. நான்கு பாகங்களை கடந்த நிலையில் இதனுடைய ஐந்தாவது  பாகத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. 

படப்பிடிப்பு முடிந்து படக்குழு அனைவரும் படப்பிடிப்பு தளத்திலிருந்து கடைசியாக ஒரு போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர். இப்போது அந்த போட்டோ  தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களைக் கொண்டுள்ள MONEY HEIST இந்தியாவிலும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறது.  தற்போது படப்பிடிப்பு முடிந்து உள்ளதால் MONEY HEIST SEASON 5 ரிலீஸுக்காக உலகம் முழுக்க இருக்கும் MONEY HEIST வெப்சீரிஸ் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.