Money Heist (La Casa De Papel) இந்த பெயரை இந்த லாக்டவுன் நேரத்தில் கேட்டிராதவர் எவரும் இருக்க மாட்டார்.உலகின் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று Money Heist (La Casa De Papel).ஒரு பேங்க்கை கொள்ளையடிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடர் சமீபத்தில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு தொடராக மாறியது,குறிப்பாக இந்தியாவில் அதிலும் முக்கியமாக தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு தொடராக இது மாறியது.

இந்த தொடரின் ஹீரோவாக இந்த கொள்ளையை ஒருங்கிணைக்கும் Professorக்கு பல கோடி ரசிகர்கள் உருவானார்கள்.இவர் மட்டுமல்லாமல் இந்த தொடரில் முன்னணி வேடத்தில் நடித்து வந்த 20க்கும் மேற்பட்டவர்களுக்கு மிகவும் பிரபலமாக மாறினார்கள்.Netflix-இல் ஒளிபரப்பான இந்த ஸ்பானிஷ் தொடரை Alex Pina உருவாக்கியிருந்தார்.,மூன்று சீசன்கள் ஒளிபரப்பாகி மூன்றுமே சூப்பர்ஹிட் அடித்திருந்த நிலையில் இதன் நான்காவது சீசன் சமீபத்தில் வெளியானது.

ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த தொடரின் நான்காம் சீசன் ஒளிபரப்பப்பட்டது.பலரும் இதனை ஆவலோடு பார்க்க இந்த தொடருக்கு பார்வையாளர்களும்,ரசிகர்களும் வெகுவாக அதிகரித்தனர்.இந்த தொடரின் ஐந்தாவது சீசனை ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.இதன் இறுதி மற்றும் ஐந்தாவது சீசன் 2 பாகங்களாக செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி பாகத்தின் முதல் பகுதி வரும் செப்டம்பர் 3ஆம் தேதியும் , இரண்டாம் பகுதி டிசம்பர் 3ஆம் தேதியும் வெளியாகவுள்ளன.இந்த ஐந்தாம் பாகத்தின் முதல் பகுதியின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.அதிரடியான இந்த ட்ரைலர் தொடரின் மீதுள்ள எதிரிபார்ப்பை இன்னும் ஏற்றியுள்ளது.இந்த விறுவிறுப்பான ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்