மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மரைக்காயர். இயக்குனர் ப்ரியதர்ஷன் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த குஞ்சலி மரைக்காயர் வாழ்க்கையை தழுவி இப்படம் உருவாகியுள்ளது. குஞ்சலி மரைக்காயர் என்கிற முகம்மது போர்த்துக்கீசியர்களை எதிர்த்து போரிட்டவர். 

mohanlal maraikayar arjun

இத்திரைப்படத்தில் பிரணவ் லால், அர்ஜுன், சுனில் ஷெட்டி, பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், நெடுமுடி வேனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரு இப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 

prabhu keerthysuresh mohanlal

தமிழில் இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி S. தாணு வெளியிடுகிறார். தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. நடிகர் சூர்யா இந்த ட்ரைலரை வெளியிட்டார். மார்ச் 26-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது.