என்றென்றும் ரசிகர்கள் மனதில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துவருகிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன்பு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ள காட்ஃபாதர் திரைப்படத்தை கண்டு ரசித்த ரஜினிகாந்த் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்.

மலையாளத்தில் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்த காட்ஃபாதர் திரைப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் காட்ஃபாதர் படத்தின் வெற்றி விழாவில், தொலைபேசியில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், “காட்ஃபாதர் படம் EXCELLENT!!” என பாராட்டியதாவும் “லூஃசிபர் திரைப்படத்திற்கும் காட்ஃபாதர் திரைப்படத்திற்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள் & ட்ரீட்மென்ட்” குறித்து பேசியதாகவும் பேசியுள்ளார். இயக்குனர் மோகன் ராஜா பேசிய அந்த வீடியோ இதோ…

 

#GodFather Success meet:

Director Mohan raja Shares SuperStar Rajinikanth's reaction after watching Chiranjeevi's #GodFather...! #Rajinikanth | #Jailer pic.twitter.com/2EAc0SDVmp

— Satheesh (@Satheesh_2017) October 13, 2022