இயக்குனர் பாலுமகேந்திராவின் கோகிலா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி 80-களில் தமிழ் திரை உலகில் நட்சத்திர நாயகராக வலம் வந்தவர் நடிகர் மோகன். மூடுபனி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, பயணங்கள் முடிவதில்லை,விதி, நூறாவது நாள், கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்ல திறந்தது கதவு, உதயகீதம், இதயக்கோவில், மௌன ராகம், ரெட்டைவால் குருவி உள்ளிட்ட பல மெகா ஹிட் திரைப்படங்களில் மோகன் நடித்துள்ளார். 

குறிப்பாக நடிகர் மோகன் நடித்த திரைப்படங்களின் பாடல்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு இன்று வரை மோகன் ஹிட்ஸ் என அனைவரது ஃபேவரட் லிஸ்டில் இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக நடிப்பிற்கு தற்காலிக ஓய்வு கொடுத்த மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் திரை உலகில் கதாநாயகனாக மோகன் நடித்துள்ள திரைப்படம் ஹரா. 

நடிகர் சாருஹாசன் கதாநாயகனாக நடித்து கடந்த 2019-ஆம் ஆண்டு வெளிவந்த தாதா87 திரைப்படத்தின் இயக்குனர் விஜய் ஸ்ரீ.G எழுதி இயக்கும் ஹரா திரைப்படத்தில் மோகன் உடன் இணைந்து நடிகை குஷ்பூ கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ஜெய்குமார், மைம் கோபி, ஆதவன், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

கோவை எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெயஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கும் ஹரா படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். இந்நிலையில் ஹரா திரைப்படத்திலிருந்து முதல் பாடலாக கயா முயா பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் விஜய ஸ்ரீ.G எழுதியுள்ள இப்பாடலை VM.மகாலிங்கம் மற்றும் சக்தி முரளிதரன் இணைந்து பாடியுள்ளனர். கலக்கலான அந்தப் பாடல் இதோ…