‘ஆர் ஆர் ஆர்’ படக்குழுவினரை பாராட்டிய உலக புகழ் பெற்ற இசைக்கலைஞர் – நெகிழ்ச்சியில் எம் எம் கீரவாணி.. வைரலாகும் பதிவு இதோ..

உலக புகழ் இசைக்கலைஞரின் வீடியோவால் நெகிழ்ந்த எம் எம் கீரவாணி வீடியோ இதோ - MM Keeravani emotional about Richard Carpenter Special Video | Galatta

லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஆஸ்கார்  95 விருது விழாவில்  சிறந்த பாடலுக்கான விருதினை ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் வென்றது. விருதினை பாடல் இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி அவர்களும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோரும் பெற்றனர். இந்திய சினிமாவை உலக மேடைகளில் தலை சிறந்த கலைஞர்களுக்கு முன்னிலையில் அரங்கேற்றிய தருணம் இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் பெருமையை தந்தது. மேலும் ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் வென்ற நிகழ்வில் இந்திய முழுவதும் கொண்டாடி தீர்த்தனர்.இதையடுத்து பல திரைக்கலைஞர், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆர் ஆர் ஆர் பட ரசிகர்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்து வந்த வண்ணம் இருந்தது.

இதற்கு முன்னதாக பல முக்கிய விருதுகளை வென்று உலக நாடுகளின் மேடைகளை அலங்கரித்த ஆர் ஆர் ஆர் படக்குழுவினருக்கு இந்த ஆஸ்கார் விருது மிக முக்கியமான விருதாக கருத்தில் கொண்டு அட்டகாசமான பிரசாரத்தை கடந்த சில மாதங்களாக உலகில் பல மேடைகளில் நிகழ்த்தி வந்தது. இதனையடுத்து இந்த விருது வென்ற நிகழ்வு கொண்டாட்டமாக மாறியது.

இந்நிலையில் உலகின் தலை சிறந்த பியானிஸ்ட் ரிச்சர்ட் கார்பெண்டர் அவரது பாடலை கேட்டு வளர்ந்தவன் நான் இன்று ஆஸ்கருடன் நிற்க்கிறேன். என்று எம் எம் கீரவாணியின் ஆஸ்கார் மேடை பேச்சு வைரலாகி வரும் நிலையில் ரிச்சர்ட்ட் கார்பெண்டர் தனது குடும்பத்தாருடன் இணைந்து ‘டாப் ஆப் தி வேர்ல்டு’ பாடலை பாடி கீரவாணி மற்றும் சந்திரபோஸ் ஆகியோருக்கும் ஆர் ஆர் ஆர் படக்குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பின் இசையமைப்பாளர் கீரவாணி அவர்கள் ரிச்சர்ட் கார்பெண்டர்  வீடியோவை பகிர்ந்து அதனுடன் “இதை நான் எதிர்பார்க்கவே இல்லை.. அளவு கடந்த மகிழ்ச்சியுடன் கண்ணீரும் வருகிறது. இந்த பிரபஞ்சம் எனக்கு கொடுத்த மிக சிறந்த பரிசு இது” என்று குறிப்பிட்டுள்ளார்.

https://t.co/va5tOLD1DH
This is something I didn’t expect at all ..tears rolling out of joy ❤️❤️❤️ Most wonderful gift from the Universe 🙏

— mmkeeravaani (@mmkeeravaani) March 15, 2023

மேலும் ஆர் ஆர் ஆர் படத்தின் இயக்குனர் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்து அதனுடன்  “இந்த ஆஸ்கார் பிரச்சாரம் முழுவதும் எனது சகோதரர் கீரவாணி அவரது அமைதியை இழக்காமல் தன்மையுடன் இருந்தார். விருது வென்ற போதிலும் அவர் அப்படியே தான் இருந்தார்.  இந்த வீடியோவை பார்த்த பின் கண்களில் இருந்து வந்த  கண்ணீர் அவரது கண்ணங்களில் வழிந்தோடியது.  எங்கள் ஆர் ஆர் ஆர் படக்குழுவினருக்கு மறக்க முடியாத தருணத்தை கொடுத்ததற்கு நன்றி!” என்றார். ராஜமௌலி. actor nani much awaited nani dasara movie trailer is outஇதனையடுத்து ரிச்சர்ட் கார்பெண்டர் அவரது வீடியோவுடன் கீரவாணி மற்றும் ராஜமௌலியின் பதிவும் ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

சாகுந்தலம் படம் எப்படி இருக்கு? சமந்தா பகிர்ந்த First review.. – ரசிகர்களால் வைரலாகும்  பதிவு இதோ..
சினிமா

சாகுந்தலம் படம் எப்படி இருக்கு? சமந்தா பகிர்ந்த First review.. – ரசிகர்களால் வைரலாகும் பதிவு இதோ..

“அடுத்து தளபதி விஜய் படம் தான்..” காயத்ரி ரகுராம் பகிர்ந்த சுவாரஸ்மான தகவல்.. – அட்டகாசமான நேர்காணல் இதோ..
சினிமா

“அடுத்து தளபதி விஜய் படம் தான்..” காயத்ரி ரகுராம் பகிர்ந்த சுவாரஸ்மான தகவல்.. – அட்டகாசமான நேர்காணல் இதோ..

“ஏன் இவ்வளவு தாமதமா சொல்லனும்?” தந்தையினால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பூ குறித்து காயத்ரி ரகுராம் -  முழு வீடியோ இதோ..
சினிமா

“ஏன் இவ்வளவு தாமதமா சொல்லனும்?” தந்தையினால் பாலியல் தொல்லைக்கு ஆளான குஷ்பூ குறித்து காயத்ரி ரகுராம் - முழு வீடியோ இதோ..