தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் நகைச்சுவை திரைப்படமாக தயாராகியிருக்கும் சுமோ திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில் யோகிபாபு உடன் இணைந்து நடித்துள்ள சலூன் மற்றும் நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ள கோல்மால் ஆகிய திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன.

இதனையடுத்து 1970களில் சூப்பர் ஹிட்டான காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்காக  மிர்ச்சி சிவா, யோகிபாபு, கருணாகரன், பிரியா ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள காசேதான் கடவுளடா திரைப்படமும் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த வரிசையில் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும். 

இயக்குனர் விக்னேஷ் ஷா.P.N எழுதி இயக்கத்தில் சிவாவுடன் இணைந்து கதாநாயகிகளாக மேகா ஆகாஷ் மற்றும் அஞ்சு குரியன் நடிக்க,பாடகர் மனோ, மா கா பா ஆனந்த், பக்ஸ், ஷா ரா,  KPY பாலா, திவ்யா கணேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் டிப்ஸ் தமிழ் இணைந்து சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தை வழங்கின்றன. 

ஒளிப்பதிவாளர் ஆர்தர்.K.வில்சன் ஒளிப்பதிவில் லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார் இந்நிலையில் சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தின்  முதல் பாடலாக சோறு தான் முக்கியம் பாடல் தற்போது வெளியானது. கலக்கலான அந்த சோறு தான் முக்கியம் பாடல் வீடியோ இதோ…