தமிழ் சினிமா நடிகர்களில் பெரிதும் பிரபலமானவர் மிர்ச்சி சிவா. 12B படத்தில் துணை நடிகராக அறிமுகமான சிவா தற்போது அகில உலக சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார். துவக்கத்தில் FM சேனல் ஒன்றில் ஆர் ஜேவாக பணியாற்றி வந்தவர், வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். அதைத்தொடர்ந்து தமிழ் படம், கலகலப்பு, தில்லு முல்லு, யா யா, வணக்கம் சென்னை என பட்டையை கிளப்பினார். 

Mirchi Shiva Appreciates Kids Dance Performance

இந்நிலையில் தமிழ்ப்படத்தில் மிர்ச்சி சிவா நடனமாடியது போல, சிறுவன் ஒருவன் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலானது. சிவாவை போலவே பாவனைகள் செய்து கொண்டு ஆடும் அச்சிறுவனின் ஆட்டம் நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அந்த வீடியோவை பார்த்த சிவா, என்னை போலவே ஒரு நல்ல டான்ஸராக வரும் திறமை இச்சிறுவனுக்கு இருக்கிறது என பாராட்டி பதிவு செய்துள்ளார். 

Mirchi Shiva Appreciates Kids Dance Performance

மிர்ச்சி சிவா கைவசம் சுமோ திரைப்படம் உள்ளது. ஹோசிமின் இயக்கிய இந்த படத்தில் பிரியா ஆனந்த், VTV கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.