தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மார்ச் 15ஆம் தேதி நடைபெற்றது.

இந்த படத்தை  Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.40 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் மீண்டும் உறுதி செய்தனர்.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.இந்த படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு விழாவில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்  மாஸ்டர் படத்தை திரையரங்குகளில் வெளியிட முடிவெடுத்ததற்கு விஜய் மற்றும் படக்குழுவினரை பாராட்டினார்.பொதுவாக பெரிய நடிகர்களின் சிறப்பு காட்சிகளை அரசு அனுமதிக்கும் அப்படி தற்போதைய சூழலில் மாஸ்டர் படத்திற்கு படக்குழு கேட்டால் பரிசீலனை செய்து சொல்லப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து சிறப்பு காட்சிகள் விரைவில் அனுமதிக்கப்படலாம் என்று ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.