தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது முத்திரையை பதித்து அடுத்து தனது எதார்த்தமான படங்கள் மூலமாக ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் சசிகுமார்.சமீபத்தில் இவர் ஜோதிகாவுடன் இணைந்து நடித்த உடன்பிறப்பே படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து ராஜவம்சம்,எம்ஜிஆர் மகன்,கொம்பு வெச்ச சிங்கம்டா படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

இவர் ஹீரோவாக நடித்துள்ள எம்ஜிஆர் மகன் படத்தினை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ளனர்.வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,ரஜினிமுருகன் , சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கிய பொன்ராம் இந்த படத்தை இயக்கியுள்ளார்.சத்யராஜ்,சரண்யா பொன்வண்ணன்,சமுத்திரக்கனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

மிர்னாலினி ரவி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பிரபல பாடகர் அந்தோணி தாசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் பாடல்கள் மற்றும் ஒரு ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.இந்த படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது.இந்த படத்தின் புதிய ட்ரைலர் ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.செம ரகளையான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்