வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா என வரிசையாக வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் பொன்ராம். இவர் தற்போது சசிக்குமாரை வைத்து எம்.ஜி.ஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக டிக்டாக் பிரபலம் மிர்ணாளினி நடிக்கிறார். இதற்கு முன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். 

sasikumar sasikumar

ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோர் நடித்து வருகின்றனர். வினோத் ரத்திரனசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அந்தோனி தாசன் இசையமைக்கிறார்.

sasikumar sasikumar

படத்தின் படப்பிடிப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தற்போது கெளப்பு கெளப்பு பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. அந்தோனி தாசன் பாடிய இந்த பாடல் வரிகளை கடல் வேந்தன் எழுதியுள்ளார்.