கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து ஷூட்டிங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.எல்லா சேனல்களிளும் தங்கள் சேனலில் பிரபலமான ஹிட் தொடர்களை மீண்டும் ஒளிபரப்ப தொடங்கியுள்ளனர்.இதற்கு சன் டிவி நிறுவனமும் விதிவிலக்கல்ல.

Metti Oli To be ReTelecasted On Sun TV Corona

2002-ல் இருந்து 2005 வரை சன் டிவியின் மூலம் அனைத்து குடும்பத்தினரிடமும் பிரபலமான ஒரு தொடர் மெட்டி ஒலி.அந்த தொடரின் டைட்டில் சாங்கிற்கென ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.800 மேற்பட்ட நாட்கள் ஓடிய இந்த தொடர் தற்போது மறுஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

Metti Oli To be ReTelecasted On Sun TV Corona

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1 மணிக்கு இந்த தொடர் ஒளிபரப்பாகவுள்ளது என்ற அறிவிப்பை சன் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளனர்.திருமுருகன் இயக்கிய இந்த சூப்பர்ஹிட் தொடரை மீண்டும் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.