தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்து வரும் மேக்னா ராஜ் கர்ப்பமாக இருக்கிறார். அவர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி கடந்த ஜூன் மாதம் 7ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். 39 வயதில் சிரஞ்சீவி மாரடைப்பால் மரணம் அடைந்ததை பார்த்த திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

சிரஞ்சீவி இறந்தபோது மேக்னா ராஜ் மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் முதன் முதலாக அப்பா ஆகப் போவதை ரசிகர்களுக்கு அறிவிக்க காத்திருந்த நிலையில் சிரஞ்சீவி உயிரிழந்தார். இந்நிலையில் மேக்னா ராஜுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மேக்னா ராஜ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

அந்த புகைப்படத்தில் சிரஞ்சீவின் கட்அவுட்டை தனக்கு அருகில் நிற்க வைத்துள்ளார் மேக்னா. மேக்னா அருகே சிரஞ்சீவி சிரித்த முகமாக இருப்பதை பார்த்த கன்னட ரசிகர்கள் கண்கலங்கிவிட்டனர். அவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது, கவலைப்பட வேண்டாம். சிரஞ்சீவி தான் உங்கள் வயிற்றில் இருக்கிறார். அவர் தான் மகனாக பிறக்கப் போகிறார். இந்த புகைப்படத்தை பார்க்கும் போது ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிறது. அதே நேரத்தில் நீங்கள் தைரியமாக இருப்பதை பார்க்க சந்தோஷமாக உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர். 

மேக்னாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இதை பார்த்த மேக்னாவோ தனக்கு பிரசவம் நடக்கவில்லை என்றும், வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த சிரஞ்சீவியை பிள்ளை உருவத்தில் பார்க்க காத்துக் கொண்டிருப்பதாக அவரின் மாமாவான ஆக்ஷன் கிங் அர்ஜுன் கூட முன்பு தெரிவித்திருந்தார். அண்ணா நீ இல்லாமல் வாழ கஷ்டமாக இருக்கிறது என்று சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான த்ருவா இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனாவால் அறிவிக்கப்பட்ட கடந்த லாக்டவுனில் பல திரைப்பிரபலங்களின் இறப்பு செய்தியை கேட்டோம். இன்று வரை இழப்புகள் அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. 2020-ம் ஆண்டு எவ்வளவு மோசமாக உள்ளது என அனைத்து தரப்பினரும் கூறினர். சுஷாந்த் சிங், சிரஞ்சீவி, வடிவேல் பாலாஜி, சேதுராமன், எஸ்.பி.பி என பல அற்புதமான கலைஞர்களை இந்த 2020-ல் இழந்து தவித்து வருகிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.