சந்தானத்தின் அடுத்த காமெடி சரவெடியில் கைகோர்க்கும் மேகா ஆகாஷ்… புதிய படத்தின் அசத்தல் அறிவிப்பு இதோ!

சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் இணையும் மேகா ஆகாஷ்,Megha akash joins with santhanam in vadakkupatti ramasamy movie | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நகைச்சுவை நடிகராக முன்னணி நட்சத்திர நாயகர்கள் அனைவருடனும் இணைந்து கலக்கலான காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் சந்தானம் தற்போது ஹீரோவாகவும் அசத்தி வருகிறார். கடைசியாக இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் சந்தானம் நடித்த குலுகுலு திரைப்படம் கடந்த (2022) ஆண்டு ரிலீஸானது. தொடர்ந்து சந்தானம் நடிப்பில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றனர். 

அந்த வகையில் பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் தனது 15வது திரைப்படமாக சந்தானம் நடித்துள்ள கிக் திரைப்படம் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக இயக்குனர் சுந்தர்.சி-யின் அரண்மனை 4 படத்தில் சந்தானம் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில் சந்தானம் நடிப்பில் அடுத்த நகைச்சுவை சரவெடி தயாராகிறது வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம். புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் கவுண்டமணி அவர்களின் ஃபேவரட் வசனங்களில் ஒன்றான வடக்குப்பட்டி ராமசாமி என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தை தெலுங்கில் ஓ பேபி & கார்த்திகேயா 2 போன்ற படங்களை தயாரித்த பீப்பிள் மீடியா ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது. 

முன்னதாக சந்தானம் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான டிக்கிலோனா படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்திற்கு தீபக் ஒளிப்பதிவில், T.சிவானந்தீஸ்வரன் படத்தொகுப்பு செய்ய, ஜான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்நிலையில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் வகையில் சந்தானத்துடன் நடிகை மேகா ஆகாஷ் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் இதோ…
 

Welcoming the gorgeous and talented @akash_megha to our Vadakkupatti 🤩😍

Megha Akash joins the cast of #VadakkupattiRamasamy alongside @iamsanthanam✨🎉

A film by @karthikyogitw's
A @RSeanRoldan musical
Produced by #PeopleMediaFactory@vishwaprasadtg @vivekkuchibotla pic.twitter.com/OVKAb8x1to

— People Media Factory (@peoplemediafcy) February 6, 2023

சினிமா

"வெற்றிமாறனின் விடுதலை படத்தில் இணைந்த தனுஷ்!" - வேற லெவல் சர்ப்ரைஸ் அறிவிப்போடு வந்த அசத்தலான வீடியோ இதோ!

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ பட மாஸான ப்ளடி ஸ்வீட் பாடல் உருவான விதம்... வேற லெவல் வைரலாகும் GLIMPSE இதோ!
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் லியோ பட மாஸான ப்ளடி ஸ்வீட் பாடல் உருவான விதம்... வேற லெவல் வைரலாகும் GLIMPSE இதோ!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த பிகில் பட நடிகர்... செம்ம மாஸ் அறிவிப்பு இதோ!
சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் இணைந்த பிகில் பட நடிகர்... செம்ம மாஸ் அறிவிப்பு இதோ!