சித்து பிளஸ் 2 படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தொடர்ந்து பில்லா பாண்டி, வில் அம்பு, கட்டப்பாவ காணோம், மன்னர் வகையறா, ராஜா ரங்கூஸ்கி உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.

சாந்தினி இருவீட்டார் சம்மதத்தோடு நடன இயக்குனர் நந்தாவை 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து அசத்தி வருகிறார் சாந்தினி.விஜய் டிவியில் ஒளிபரப்பான தாழம்பூ என்ற தொடரின் மூலம் சீரியல்களில் அறிமுகமானார் சாந்தினி.இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஜீ தமிழின் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்றான ரெட்டை ரோஜா தொடரில் சில மாதங்களுக்கு முன் ஹீரோயினாக இணைந்தார் சாந்தினி.இந்த தொடரில் இவரது நடிப்பு பலராலும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.அக்ஷய் கமல் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார்.ரஷ்மிதா ரோஜா மற்றொரு ஹீரோயினாக இணைந்து அசத்தி வருகிறார்.

பரபரப்பாக சென்று வரும் இந்த தொடர் 600 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த மீரா கிருஷ்ணன் சில காரணங்களால் விலகியுள்ளார் இவருக்கு பதிலாக பிரபல நடிகை இந்த தொடரில் இணைந்துள்ளார்.