திரையுலகின் இயக்குனர் இமயமாய் விளங்குபவர் பாரதிராஜா. கடைசியாக பாண்டிராஜ் இயக்கிய நம்ம வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மீண்டும் ஒரு மரியாதை. 

bharathiraja bharathiraja

வயதான முதியருக்கும் இளம்பெண்னுக்கும் இடையிலான கதையான இதில் நட்சத்திரா, ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு முதலில் ஓம் (ஓல்டுமேன்) எனப் பெயரிடப்பட்டிருந்தது. இப்போது முதல் மரியாதை படத்தை நினைவுப் படுத்தும் விதமாக மீண்டும் ஒரு மரியாதை என மாற்றப்பட்டுள்ளது. NR ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சபேஷ் முரளி பின்னணி இசை பணிகளை செய்துள்ளார். 

bharathiraja meendumorumariyadhai

படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது. தற்போது படத்திலிருந்து இளமையின் காட்டில் பாடல் வீடியோ வெளியானது. சத்ய பிரகாஷ் மற்றும் வைஷாலி பாடியுள்ள இந்த பாடல் வரிகளை நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். தனது வரிகளின் மூலம் நம்முடன் இருக்கின்றார் கவிஞர் நா.முத்துக்குமார். வரும் பிப்ரவரி 21-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.