ரசிகர்களின் மனம் கவர்ந்த தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ்.தங்களது வித்தியாசமான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தனர் ஜீ தமிழ்.பல சூப்பர்ஹிட் தொடர்களையும் நட்சத்திரங்களையும் ஜீ தமிழ் உருவாக்கியுள்ளனர்.

1000 எபிசோடுகள் கடந்து பல சூப்பர்ஹிட் தொடர்களை உருவாக்கியுள்ளது ஜீ தமிழ்.பெரிய ஹிட் தொடர்களாக இருந்தாலும் சரி , புது சீரியல்களாக இருந்தாலும் சரி ரசிகர்களின் ரசனை அறிந்து தொடர்களை ஜீ தமிழ் ஒளிபரப்பி வருகின்றனர்.

ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் மீனாட்சி பொண்ணுங்க.பிரபல சினிமா நடிகை அர்ச்சனா இந்த தொடரின் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்.இவருடன் இணைந்து ஹீரோயின்களாக மோக்ஷிதா,காயத்ரி யுவராஜ்,ப்ரணிகா தக்ஷு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்த சீரியலில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சீரியலின் முதல் ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த தொடர் வெகு விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.இந்த சீரியல் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.