கொரோனா அச்சத்தில் நாடு முழுவதும் மக்கள் உறைந்து போயிருக்க, அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்குச் உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 3-ம் தேதி நாட்டு மக்களிடம் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் கூறுகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், கட்டுப்பாடுகளை மதிக்கும் மக்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

Master

அதுமட்டுமல்லாமல் வரும் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து விடுங்கள். பின்னர் டார்ச் லைட், மெழுகுவர்த்தி போன்றவற்றின் மூலம் ஒளியை பரவவிடுங்கள். இதன் மூலம்  நாம் தனிமையில் இருந்தாலும், கொரோனாவுக்கு எதிராக ஒன்றாகப் போராடி வருகிறோம் என்பதை நிரூபிக்கும். 

Rathnakumar

ஆதராவாக பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்தாலும் ஒருசிலர் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் மாஸ்டர் படத்தின் எழுத்தாளரான இயக்குனர் ரத்னகுமார் தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதில் வாசலில் நின்று கை தட்ட சொன்னதுக்கு தெருவில் கூட்டம் கூட்டமாக நின்று தட்டை தட்டிய மக்களுக்கு முதலில் வருத்தங்களும், கண்டனங்களும் தெரிவித்திருக்கலாம். இப்போது அடுப்பை பற்ற வைக்க கூட வசதியில்லாத மக்களை விளக்கை ஏற்ற சொல்கிறார். சற்று பயமாக தான் இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.