மாஸ்டர் படத்தின் வாத்தி கபடி பாடல் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | January 13, 2021 22:01 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் கில்லி படத்தின் தீம் மியூசிக்கை மாஸ்டர் பட மியூஸிக்குடன் இணைத்து அனிருத் ஒரு முக்கிய காட்சியில் பயன்படுத்தியிருப்பார் இது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.தற்போது இந்த பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Thalapathy Vijay's MASTER Vaathi Kabaddi song video | Lokesh Kanagaraj | Anirudh
13/01/2021 06:10 PM