மாஸ்டர் படத்தில் விஜயின் ரிங்டோன் இதுதான் ! மாஸ்டர் தி பிளாஸ்டர் பாடல் வெளியீடு
By Aravind Selvam | Galatta | January 15, 2021 16:19 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் இடம்பெற்ற வெளியிடப்படாத பாடல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.மாஸ்டர் தி ப்ளாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் விஜயின் ரிங்டோனாக படத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Theatres screening Master and Eeswaran - Chennai Police's new order
15/01/2021 02:35 PM
Salaar Saga Begins: Prabhas and Yash at launch event | Prashanth Neel
15/01/2021 01:19 PM