தமிழ் சினிமாவில் ஆறிலிருந்து அறுபதுவரை அனைத்து தரப்பினரையும் கவரும் ஆற்றல் பெற்ற நடிகர்கள் சிலர் மட்டுமே.அதில் தளபதி விஜய் மிகமுக்கியமானவர்.டான்ஸ்,காமெடி,ஆக்ஷன் என்று தனது படங்களில் கம்ப்ளீட் என்டர்டைன்மெண்ட் கொடுக்க விஜய் தவறுவதில்லை.

Master Thalpathy Vijay Movies Telecast in TV TRP

அதற்காகவே இவருக்கு பெண்கள் மற்றும் குழந்தை ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர்.இவரது படங்கள் ரிலீஸ் ஆனால் குடும்பம் குடும்பமாக படம் பார்க்கவும் மக்கள் தயாராக உள்ளனர்.இவர் நடிப்பில் தயாராகியிருந்த மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவிருந்தது.

Master Thalpathy Vijay Movies Telecast in TV TRP

கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.ஊரடங்கு காரணமாக தொலைக்காட்சிகளில் படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பட்டு வருகின்றன.மக்களுக்கு பொழுதுபோக்காக இருப்பதே டிவியம் செல்போனும் தான் என்பதால் மக்களை கவர சேனல்களில் போட்டிபோட்டு திரைப்படங்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

Master Thalpathy Vijay Movies Telecast in TV TRP

இந்த போட்டியில் முக்கால்வாசி சேனல்களில் விஜய் படங்கள் ஒளிபரப்பட்டிருக்கின்றன.கிட்டத்தட்ட இந்த பத்து நாட்களில் 22 விஜய் படங்கள் ஒளிபரப்பப்பட்டுள்ளன.கடந்த மார்ச் 15-ல் கத்தி,புலி படங்களுடன் தொடங்கிய இந்த விடுமுறை நாட்கள்.இதனை தொடர்ந்து விஜயின் துள்ளாத மனமும் துள்ளும்,ப்ரண்ட்ஸ் லவ் டுடே,நினைத்தேன் வந்தாய் என்று விஜயின் கிளாசிக் படங்கள் வரிசை கட்டத்தொடங்கின.இதற்கு மறுபக்கம்  நண்பன்,சிவகாசி,சச்சின்,சுறா என்று விஜயின் சூப்பர்ஹிட் படங்கள் ஒருபுறம் என அடித்துநொறுக்கியது விஜய் படங்கள்.

Master Thalpathy Vijay Movies Telecast in TV TRP

இந்நிலையில் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரு நாள் ஊரடங்கு என்றதும் எல்லா சேனல்களும் TRPயில் உச்சம் தொடவேண்டும் என போட்டி போட்டன.இந்த நேரத்தில் விஜயின் ஆல் டைம் ஹிட்டான கில்லி படத்தை ஒளிபரப்ப சன் டிவி தயாரானது.விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் இந்த படத்தினை பார்ப்பதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர்.16 வருடங்கள் கழித்தும் இந்த படத்திற்கான வரவேற்பு குறையாமல் இருந்தது.

Master Thalpathy Vijay Movies Telecast in TV TRP

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் விஜயின் மெகாஹிட் திரைப்படமான ஒளிபரப்பட்டது.இப்படி 10 நாள் இடைவேளையில் விஜயின் 22 படங்கள் ஒளிபரப்பப்பட மக்களிடம் உள்ள விஜய் படங்களுக்கான வரவேற்பை காட்டுகிறது.எத்தனைமுறை போட்டாலும் விஜய் படங்களுக்கான மவுசு குறையாமலேயே இருக்கிறது என்பது தான் உண்மை.இதனால் விஜய் படங்களை ஒளிபரப்ப டிவி சேனல்களும் தவறுவதில்லை.

Master Thalpathy Vijay Movies Telecast in TV TRP

அடுத்ததாக வரும் ஞாயிறன்று விஜயின் மெகாஹிட் திருப்பாச்சியும்,மெர்சலும் ஒளிபரப்படவுள்ளன.இந்த ஊரடங்கு முடிவதற்குள் விஜயின் 63 படங்களும் ஒளிபரப்பாகிவிடும் போல இருக்கிறது.விஜய்க்கு தியேட்டரில் படம் ரிலீஸ் அனால் எப்படி இருக்குமோ அப்படி தான் டிவியில் ஒளிபரப்பாகும் போதும் மக்கள் கொண்டாடுகிறார்கள்.

Master Thalpathy Vijay Movies Telecast in TV TRP

எப்போதும் மக்கள் ரசிக்கும்,ரிபீட் வேல்யூ உள்ள என்டர்டைன்மெண்ட் நிறைந்த படங்களை விஜய் சளைக்காமல் கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும்.ரசிகர்களின் நெஞ்சங்களில் சர்க்கார் அமைத்து குடியேறியிருக்கும் இவரது மெர்சல் பயணம் மேலும் உச்சம்தொட்டு மாஸ்களின் மாஸ்டர் ஆக என்றும் இருக்க கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.

Master Thalpathy Vijay Movies Telecast in TV TRP