தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்துவருகிறார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Thalapathy Vijay As Vaathi in The Film

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Master Thalapathy Vijay As Vaathi in The Film

இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நிறைவடைந்தது.இது குறித்து பதிவிட்ட படக்குழுவை சேர்ந்த உதவி இயக்குனர் சத்யா மற்றும் உடையலங்கார கலைஞர் பிரவீன் ராஜா இருவரும் வாத்தி என்று பதிவிட்டிருந்தனர்.படத்தில் விஜய் ஆசிரியராக வருவதால் அவரை மாணவர்கள் செல்லமாக வாத்தி என்று அழைக்கலாம் என்று தெரிகிறது.இதை தெரிந்துகொள்ள நாம் பட ரிலீஸ் வரை காத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.