பட்டையை கிளப்பும் வாத்தி ! மாஸ்டர் இரண்டாம் பாடல்
By Sakthi Priyan | Galatta | March 10, 2020 17:00 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். ஏப்ரல் மாதம் 9-ம் தேதி வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடல் வரிகளுக்கு விஜய் குரல் தந்துள்ளார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். 129 நாட்கள் கொண்ட ஷூட்டிங் சமீபத்தில் முடிந்தது.
மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாடல் வாத்தி இஸ் கம்மிங் பாடல் லிரிக் வீடியோ வெளியானது. குத்து பாட்டாக இருக்கும் இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. கானா பாலச்சந்தர் எழுதி பாடியுள்ளார்.