கடந்த 2017-ம் ஆண்டு மேயாத மான் எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரத்னகுமார். வைபவ், பிரியாபவானி மற்றும் இந்துஜா நடிப்பில் வெளியான இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

vijay

அதன் பிறகு 2019-ம் ஆண்டு அமலா பால் வைத்து ஆடை எனும் படத்தை இயக்கினார். திரில்லர் படமான இந்த படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிகிறார். தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வருகிறது மாஸ்டர் திரைப்படம். மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

rathnakumar

rathnakumar

ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. சமீபத்தில் இதன் முதல் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தை ஈர்த்தது. சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது ட்விட்டர் வரவும், பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்று பதிவு செய்துள்ளார். இதனால் இரண்டாம் லுக் போஸ்டர் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தளபதி ரசிகர்கள்.