மாஸ்டர் படத்தின் அதிரடி பாடல் ப்ரோமோ வெளியீடு !
By Aravind Selvam | Galatta | January 10, 2021 18:31 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்த படத்தின் சென்சார் வேலைகள் நிறைவடைந்து , படத்திற்கு யூ/ஏ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.
ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் இந்த படத்தின் புதிய ப்ரோமோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.அந்த கண்ண பார்த்தாக்கா பாடலோடு ஒரு ரொமான்டிக் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது,இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Namma pada, velukum thara! 🔥
— XB Film Creators (@XBFilmCreators) January 10, 2021
Inniyoda treat yepidi? 😉#MasterPromo6 #MasterPongal@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ @iam_arjundas @andrea_jeremiah @imKBRshanthnu @Lalit_SevenScr @Jagadishbliss pic.twitter.com/uWOZTmqvAk
Aishwarya Rajesh's next Tamil film officially announced - title revealed!
10/01/2021 04:36 PM
Sai Pallavi's next film - Love Story Official Teaser | Naga Chaitanya
10/01/2021 04:10 PM
Did you know? SK was one of the reasons for Ashwin's career! Watch Video!
10/01/2021 03:33 PM
LATEST: Shivani evicted from Bigg Boss 4 house | Kamal Haasan | Last Eviction
10/01/2021 03:00 PM