மாஸ்டர் திரைப்படத்தின் ஒரு குட்டி கதை பாடல் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | February 14, 2020 17:00 PM IST

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்று பேசப்படுகிறது. படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
சமீபத்தில் நெய்வேலி படப்பிடிப்பு தளத்திலிருந்து நடிகர் விஜய் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்ஃபி எடுத்துக்கொண்டது இணையத்தில் வைரலானது. அத்துடன் அந்த படப்பிடிப்பு முடிவடைந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது. படத்தின் முதல் சிங்கிள் ஒரு குட்டி கதை பாடல் தற்போது வெளியானது. அருண்ராஜா காமராஜ் இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். தளபதி விஜய்யின் குரலில் இந்த பாடல் வெளியானதால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் ரசிகர்கள்.