தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான விஜய் தொலைக்காட்சி அனேக ரசிகர்களின் அபிமான சேனலாக வலம் வருகிறது. சீரியல்கள் மட்டுமல்லாது தனது ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலமும் பல சேனல்களுக்கு முன்னோடியாக விளங்கி வருகிறது விஜய் தொலைக்காட்சி.

விஜய் டிவியின் ரியாலட்டி நிகழ்ச்சிகளின் மீது மக்களுக்கு எப்போதும் ஆர்வம் அதிகம். அந்த வகையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ் ரசிகர்களுக்காக சிறப்பாக வழங்கி வருகிறது விஜய் டிவி.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை நான்கு சீசன்கள் நடைபெற்றுள்ள நிலையில் ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது இதன் முன்னோட்டமாக நேற்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய புரோமோ வெளியானது.பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பல நட்சத்திரங்களின் பெயர்கள் வருகின்றன.

இந்நிலையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த மாஸ்டர் மகேந்திரனிடம் இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் “பிக் பாஸ் 5” என கேள்வி எழுப்ப அதற்கு மாஸ்டர் மகேந்திரன் “வாழ்க்கையே ஒரு பிக்பாஸ் இதுல வேற... உள்ள வேற...” என பதிலளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மகேந்திரனின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.