லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். 

mahendran

மாஸ்டர் படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வரும் நிலையில், படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலருக்கு ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மகேந்திரன் இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ரசிகர் ஒருவர் மாஸ்டர் டீசர் எப்போது வெளியாகும் என கேட்டதற்கு, உங்களை போல நானும் வெயிட்டிங் தான். டீஸர் அல்லது ட்ரைலர் வந்தா நல்லா இருக்கும். கவலைப்படாதீங்க, ஏப்ரல் 14-க்குள் ஒரு நல்ல அப்டேட் வரும் என பதிலளித்தார். 

master

இதையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமடைய, எப்பா ராசா, ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அதான் ஒரு கணக்குல நானா சொன்னேன்... ஒரு ரசிகனா நானும் உங்களை மாதிரி வெயிட் பண்ணிட்டு தான் இருக்கேன், மத்தபடி எனக்கு ஒன்னுமே தெரியாது என அவர் பதிவு செய்துள்ளார். எது எப்படியோ 14-ம் தேதிக்குள் அப்டேட் வந்தால் மகிழ்ச்சி என காத்திருக்கின்றனர் தளபதி ரசிகர்கள்.