கடந்த 1994-ம் ஆண்டு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான நாட்டாமை படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். மழலைத்தனம் மிகுந்த இவரது நடிப்பால் பலரையும் ஈர்த்துள்ளார். ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், பிரபு என அனைத்து திரை ஜாம்பவான்களுடன் சிறு வயதிலேயே நடித்து விட்டார் மகேந்திரன். 

MasterMahendran

பாண்டியராஜனுடன் இவர் நடித்த தாய்க்குலமே தாய்க்குலமே திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக திகழ்கிறது. வெகு நாட்களுக்கு பிறகு விழா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்கத்துவங்கினார். 

MasterMahendran

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் முத்து படத்தில் குலுவாலிலே பாடலில் சூப்பர் ஸ்டாருடன் மாஸ்டர் மகேந்திரன் நடனமாடிய வீடியோவை பகிர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்த மகேந்திரன், தலைவர் கூட டான்ஸ், அத விட வேற என்ன வேணும்? என்று பதிவு செய்துள்ளார்.