குட்டி ஸ்டோரியின் மாஸான சாதனை ! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | May 21, 2021 19:41 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.கொரோனாவிற்கு பிறகு வெளியாகும் பெரிய ஹீரோ படம் என்பதால் இந்த படத்திற்கு அதீத எதிர்பார்ப்பு இருந்தது.இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் பல இடங்களில் வசூல் சாதனை நிகழ்த்தியது இதனை தொடர்ந்து OTT-யிலும் பெரிய வரவேற்பை பெற்றது இந்த பாடல்.
இந்த படத்தின் சூப்பர்ஹிட் பாடல்களில் ஒன்று குட்டி ஸ்டோரி விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.யூடியூப்பில் இந்த பாடல் 65 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.தற்போது 1 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.இந்த சாதனையை செய்யும் 10ஆவது விஜய் வீடியோ என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது.