தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ஓடி வருகிறது.இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

Master Kutti Story Song Gets Appreciation From STR

இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.சாந்தனு,ஆன்டனி வர்கிஸ்,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.

Master Kutti Story Song Gets Appreciation From STR

இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளது.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Master Kutti Story Song Gets Appreciation From STR

அனிருத் இசையில் அருண்ராஜாகாமராஜ் பாடல் எழுத தளபதி விஜய் இந்த பாடலை பாடியுள்ளார்.இந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.தற்போது இந்த பாடலை STR பாராட்டியுள்ளார் என்ற செய்தியை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.