தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இவர்கள் இருவருக்குமே மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியானது. இதனை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மீண்டும் இந்த கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் தல அஜித் நடிப்பில் வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை எச் வினோத் இயக்குகிறார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் வினோத் மற்றும் லோகோஷ் கனகராஜூம் சந்தித்து கொண்டுள்ளனர். இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு நடந்த சந்திப்பு என தெரிவித்துள்ளார் லோகேஷ். இவர் வெளியிட்ட இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வினோத் தற்போது வலிமை படத்தை இயக்கி வருகிறார். நேர் கொண்ட பார்வையில் நடித்த அஜித், அதை முடித்த கையோடு வினோத் இயக்கும் அடுத்த படமான தல 60 படத்தில் நடித்து வருகிறார். போனி கபூரின் பேவியூ புரோஜெக்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டது.

ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு நடிக்கும் வலிமை படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் படப்பிடிப்பு துவங்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும் இதுவரை அதிகாரப்பூர்வமாக ஒரு அப்டேட் கூட வெளியிடப்படவில்லை. இருப்பினும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இடை விடாது வலிமை அப்டேட் பற்றி கேட்டுக் கொண்டே உள்ளனர். 

சமீபத்தில் வலிமை படத்தின் போட்டோ ஒன்று இணையத்தில் கசிந்தது. அது பற்றியும் படக்குழு இதுவரை வாய்திறக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் கூறுகையில், தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் மொத்த சூட்டிங்கும் 2021 பிப்ரவரி 15 ம் தேதியுடன் முடிய உள்ள தகவலை தெரிவித்துள்ளார்.

ஆனால் ஒரே ஒரு சண்டை காட்சி மட்டும் மீதம் இருப்பதாகவும், அதை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அது முடிந்ததும் போஸ்ட் புரோடெக்ஷன் பணிகள் துவங்கும் என்றவர், இதுவரை படத்தின் ரிலீஸ் தேதி பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளரான போனி கபூரே இப்படி கூறி விட்டதால் பிப்ரவரி 15 க்கு பிறகு வலிமை பற்றிய அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கள் வெளியிடப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. யுவன் ஷங்கர் இசையில் உருவாகி வரும் வலிமை இன்ட்ரோ சாங்கின் மேக்கிங் வீடியோ சமீபத்தில் தீயாய் பரவியது. பாடல் அதிரடியான, ஒரு துள்ளலிசைப் பாடலாக, ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என்று யுவன் கூறியிருந்தார்.