மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.முதல் படத்திலேயே நல்ல இயக்குனர் என்ற பெயரை சம்பாதித்த இவர் தனது இரண்டாவது படமான கைதியையும் வெற்றிப்படமாக மாற்றி காட்டினார்.

Master Director Lokesh Kanagaraj About Fake ID

அடுத்ததாக தளபதி விஜய்,மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தினை இயக்கியுள்ளார்.இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த படம் குறித்த வதந்திகளை சிலர் லோகேஷ் கனகராஜ் பெயரை பயன்படுத்தி ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பரப்பி வந்தனர்.

Master Director Lokesh Kanagaraj About Fake ID

இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.தான் ட்விட்டரில் மட்டும் தான் இருப்பதாகவும் ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் இல்லை என்றும் அந்த கணக்குகளில் தெரிவிக்கப்படும் பொய்யான தகவல்களை நம்பவேண்டாம் என்றும் தெளிவுபடுத்தினார்.