தமிழ் திரையுலகில் பல ஹீரோ ஹீரோயின்களை தனது நடன இயக்கத்தால் இயக்கியவர் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. பல வெற்றி படங்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார். உலகநாயகன் கமல் ஹாசன் நடித்த நம்மவர் படத்தில் நடித்திருப்பார். 

Brindha Dulquer

தற்போது நடிகர் துல்கர் சல்மான் வைத்து ஹே சினாமிகா என்ற படத்தை இயக்கவுள்ளார். பிருந்தா இயக்குனராக களமிறங்கும் முதல் படம் இதுதான் என்பது கூடுதல் தகவல். துல்கர் சல்மானுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் தெரியவந்தது. அதிதி ராவ் ஹைதாரி முக்கிய ரோலில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Heysinamika

96 புகழ் கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வானம் கொட்டட்டும் படத்தில் தனது ஒளிப்பதிவு மூலம் ஈர்த்த ப்ரீதா ஜெயராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் நடிப்பில் இறுதியாக வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், இந்த படமும் அவருக்கு முக்கிய திருப்பமாக இருக்கும் என்று கூறலாம்.