தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

விழாவில் பேசிய மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முதலில் தான் வேண்டுமென்றே லேட்டாக வரவில்லை படப்பிடிப்பு இருந்ததால் தாமதமாக வந்ததாக இருந்ததாக தெரிவித்தார்.தளபதி விஜயுடன் ஒரு படத்தில் நடித்தது மிகப்பெரிய விஷயம் என்று தெரிவித்தார்.எப்போதும் புதிதாக எதாவது ஒன்றை விஜய் ட்ரை செய்கிறார் என்று தெரிவித்தார்.விஜய் வெட்கப்பட்டா ரொம்பா அழகா இருக்கும்னு விஜய்சேதுபதி தெரிவித்தார்.

படத்தயாரிப்பாளர் தனக்கு பாஸ் தராமல் அவரே எடுத்துக்கொண்டார் என்று விஜய்சேதுபதி தெரிவித்தார்.லலித்குமாருக்கும் தனக்கும் நிறைய சண்டை ஏற்படும் இருந்தாலும் ரொம்ப நல்ல மனிதர் தனக்கு 96 ரிலீஸ் ஆவதில்  என்றும் விஜய்சேதுபதி தெரிவித்தார்.தன் வாழ்க்கையில் மாஸ்டர் தனது தந்தை தான் என்று விஜய்சேதுபதி தெரிவித்தார்.கொரோனா வைரஸ் பற்றி மக்கள் அச்சப்படமால் தைரியமாக இருக்குமாறு கூறினார்.அடுத்ததாக சாமியை வைத்து சண்டைபோடும் கோஷ்டிகளுடன் யாரும் சேர வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த படத்தில் தான் தான் ஹீரோ என்றும் விஜய் தனக்கு வில்லன் என்றும் தெரிவித்தார்.லோகேஷ் கனகராஜ் மிகவும் பாசிட்டிவ் ஆன மனிதர் அவருடைய வாழ்க்கையையே ஒரு மாஸ் படமாக எடுக்கலாம் என்று தெரிவித்தார்.