தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Master Audio Launch Vijay Hugs His Parents

மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வருகிறது.

Master Audio Launch Vijay Hugs His Parents

விழாவில் பேசிய விஜயின் தந்தை என்னை மேடைக்கு அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை இங்கே இருக்கும் எல்லாருமே எனது குடும்பத்தினர் தான் சந்தோஷத்தில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை என்று தெறிவித்தார்.எல்லா துறையில் உள்ள எல்லா பெரிய நடிகர்களுடனும் பணிபுரிந்து விட்டேன்.மாஸ்டர் விஜயை கணித்தது போல் நாளைய தீர்ப்பையும் கணித்து வைத்துள்ளேன் என்று தெரிவித்தார்.

Master Audio Launch Vijay Hugs His Parents

அடுத்ததாக பேசிய விஜயின் அம்மா ஷோபா விஜய் பாடியதிலேயே காதலுக்கு மரியாதையில் இடம்பெறும் ஓ பேபி பாடலும்,மாஸ்டரில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலும் மிகப்பிடிக்கும் என்று தெரிவித்தார்.விஜய் மேடையில் வந்து தன்னை கட்டிபிடிக்கவென்டும் என்று விருப்பப்படுவதாக தெரிவித்தார்.உடனடியாக மேடைக்கு வந்த விஜய் ஷோபாவையும்,சந்திரசேகரையும் கட்டியணைத்தார். 

Master Audio Launch Vijay Hugs His Parents